டெல்லி: மணிப்பூர் நிலவரத்தை நேரில் கண்டறிய எதிர்க்கட்சிகளைக் கொண்ட  ‘I.N.D.I.A’ கூட்டணி எம்.பிக்கள் இன்று மணிப்பூர் பயணம் மேற்கொள்கின்றனர். இதுகுறித்து கூறிய மத்திய அமைச்சர்   அனுராக்தாக்கூர்,  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் ராஜஸ்தானில் எதிர்கட்சிகள் அங்கு செல்லவில்லை.இந்தியா கூட்டணி ராஜஸ்தானுக்கும் போகுமா?,. மேற்கு வங்கம் செல்லுமா  என கேள்வி எழுப்பினார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், கடந்த மே 3-ம் தேதி முதல் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. மேலும் பிரதமர் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அங்கு வேறு யாரும் செல்ல   அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டது. என்றாலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாத இறுதியில் மணிப்பூரில் சில இடங்களுக்குச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூரில் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.  இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் நாளையும் நாளை மறுதினமும் (ஜூலை 29, 30)அங்கு பயணம் மேற்கொள்கின்றனர்.  இந்தக் குழுவில் இடம்பெறும் எம்.பி.க்கள் தொடர்பான விவரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

“இந்தியா” கூட்டணியின் முதன்மை கட்சிகளில் ஒன்றான திமுக சார்பாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி இடம்பெறுகிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஃபைசல் முகமது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், ஜாவேத் அலி, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சந்தீப் பதக் உள்ளிட்டோர் நாளை மணிப்பூர் செல்லும் குழுவில் இடம் பெறும் எம்.பி.க்கள் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி. சுஷ்மிதா தேவ் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், நாளை மணிப்பூர் செல்லும் குழுவில் இடம்பெறுகிறோம். மணிப்பூரின் உண்மை நிலைமை என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். ஆகையால் “இந்தியா” கூட்டணி குழுவை மாநில அரசு அனுமதிக்க வேண்டும். மணிப்பூர் வன்முறைகளை வெளிஉலகுக்கு ஊடகங்கள்தான் கொண்டு வந்தன. ஆனாலும் இன்னமும் வெளியே வராத பல சம்பவங்கள் மணிப்பூரில் இருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிபப்டையில் அந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் நாங்கள் வெளியே கொண்டு வருவோம் என்றார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் செல்வது குறித்து : கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “மணிப்பூர் சென்ற இந்திய கூட்டணி எம்.பி.க்களின் ஆட்டம் இது. மணிப்பூர் முன்பு எதிர்க்கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் பேசவே இல்லை. மாநிலத்தில் தங்கள் ஆட்சியின் போது எரிக்கிறார்கள்…மணிப்பூரில் இருந்து அவர்கள் திரும்பியதும், காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவர்களை மேற்கு வங்காளத்திற்கு அழைத்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அதிர் ரஞ்சன் சவுத்ரி மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஏற்கிறாரா என்று கேட்க விரும்புகிறேன். …கொலைகள் & பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் ராஜஸ்தானில் எதிர்கட்சிகள் அங்கு செல்லவில்லை.இந்தியா கூட்டணி ராஜஸ்தானுக்கும் போகுமா?…” என கேள்வி எழுப்பினார்.