லக்னோ:  யோகி ஆட்சி செய்யுத் உத்தரபிரதேச மாநிலம், சம்பாலில் கடந்த 7ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு நாளில், உ.பி., போலீசார், ஓட்டுச்சாவடிகளில் புகுந்து, அடையாள அட்டைகளை பறித்து, வாக்காளர்களை தாக்கியதாக, அந்த பகுதி முஸ்லிம்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2022 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு அதிகளவில் வாக்களித்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் உ.பி மாநிலம் உள்பட 11 மாநிலங்களைச் சேர்ந்த 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பிரதமர் வாக்குப்பதிவு செய்த காந்தி நகர் உள்பட பல தொகுதிகளும் அடங்கும். இந்த தேர்தலின்போது உ.பி. மாநிலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது.

2022 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு அதிகளவில் வாக்களித்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில், யோகி ஆதரவு காவல்துறையினர், முஸ்லிம்கள் வாக்களிப்பதை தடுத்து, தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தின் சம்பல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மன்சூர்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில்  வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு 18 வயது இளைஞரான முகமது ஜமால்  என்பது, தனது வாழ்நாளில் முதல் முறையாக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்  வாக்களிக்க வரிசையில் நின்றபோது, சுமார் காலை 10.30 மணியளவில்  திடீரென காவல்துறையினர்,, கிட்டத்தட்ட 10 எஸ்யூவிகள் வாக்குப்பதிவு மையத்திற்கு  வந்ததாகவும்,   சுமார் 30-40 போலீஸ் அதிகாரிகள்  மையத்திற்குள் நுழைந்து, வாக்காளர்களிடமிருந்து அடையாள அட்டைகள் மற்றும் வாக்குச் சீட்டுகளைப் பறித்து, ஃபைபர் பட்டன்கள் மற்றும் மர லத்திகளால் தாக்கியதாக   குற்றம் சாட்டி உள்ளனர்.

ஜமால் என்பவர், “இரண்டு போலீஸ்காரர்கள் என்னிடம் வந்து எனது ஆதாரைக் கேட்டார்கள்,” என்று  கூறியதுடன்,  “நான் பயந்து போய் அவர்களிடம் ஒப்படைத்தேன். அப்போது மூன்றாவது ஒருவன் பின்னால் இருந்து என் கழுத்தில் அறைந்தான். நான் சாவடியை விட்டு வெளியேறும் வரை அவர்கள் என்னை அடித்தார்கள். போலீசாரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வாக்காளர்கள் வெளியே ஓடியதால் சில நிமிடங்களில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஜமால், கால்கள் இன்னும் லத்திகளின் முத்திரையைத் தாங்கிக்கொண்டு, நொண்டி வீட்டுக்குத் திரும்பினேன் என தெரிவித்து உள்ளார்.

சம்பாலில் உள்ள அஸ்மௌலி சட்டமன்றத் தொகுதியில் உள்ள பல முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் உத்தரப் பிரதேச காவல்துறை யினரால் இதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டதாக ஸ்க்ரோல் பத்திரிகை தெரிவித்து உள்ளது.

இந்த கிராமங்களில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி, சமாஜ்வாடி கட்சியை விட பின்தங்கியுள்ளது. 2019ல் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் மறைந்த ஷபிகுர் ரஹ்மான் பார்க் 1.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பார்கின் பேரன் ஜியா உர் ரஹ்மான், சம்பாலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக உள்ளார். ரெஹ்மான் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சவுத்ரி சவுலத் அலி இருவரும், சம்பல் தொகுதி முழுவதும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கிராமங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தினர்.  ரெஹ்மான் போலீசில் புகார் பதிவு செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், இந்த காவல்துறையினர்,  மன்சூர்பூருக்கு வருவதற்கு முன்பு, ஷாபாஸ்பூர் காலாவில் வாக்காளர்களைத் தாக்கியதாகவும், ஓவரி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை போலீஸார் தாக்கியதாகவும் நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஓவரியில், சிலர் தாக்குதலை வீடியோவில் கைப்பற்றினர். மன்சூர்பூருக்குப் பிறகு, முபாரக்பூர் பேண்ட் கிராமத்திற்கு போலீஸார் காரில் சென்றதாகக் கூறப்படுகிறது, அங்கு அவர்கள் வாக்குச்சாவடி மையத்தில் ஒரு தலித் மனிதரையும் அவரது தாயையும் தாக்கியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து கூறிய, உத்தரபிரதேச காவல்துறை தலைமை இயக்குனர் பிரசாந்த் குமார்,  இது குறித்து ஏதேனும் புகார்கள் வந்தால் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.