சென்னை

பிரபல இயக்குநர் ராஜமவுலி பாகுபலி படத்தின் ஆம் பாகம் கண்டிப்பாக வரும் எனக் கூறியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், தமனா, அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி, உலக அளவில் ரூ.600 கோடியைக் கடந்ததாக தகவல் வெளியானது.

பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டு வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூல் ஈட்டியது. உலகமுழுவதும் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ரசிகர்காள்பாகுபலி படத்தின் 3-ம் பாகத்தையும் உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் பிரபாஸ் இது குறித்து,

”பாகுபலி 3-ம் பாகம் எடுப்பது எனது கையில் இல்லை. அது டைரக்டர் ராஜமவுலி கையில் இருக்கிறது. பாகுபலி எப்போதும் எனது இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும்’

என்று தெரிவித்தார்.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜமவுலி,

”பாகுபலி என் மனதில் இடம்பெற்ற முக்கியமான படம். இந்த படத்தின் 3-ம் பாகம் வருமா? என்று கேட்கிறார்கள். பாகுபலி 3-ம் பாகம் கண்டிப்பாக உருவாகும். இதுகுறித்து பிரபாசிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது”

என்று தெரிவித்துள்ளார்.