ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து மெல்பர்ன் சென்ற விமானத்தில் நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் VA696 விமானத்தில் திங்களன்று இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெர்த் விமான நிலையத்தில் இருந்து விமான கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்திற்குள் நிர்வாணமாக ஓடிய நபர் விமான சிப்பந்தியை தாக்கி கீழே தள்ளினார்.

இதுகுறித்து விமானிக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் பெர்த் விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டது.

அங்கு விமான நிலையத்தில் தயாராக காத்திருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறிய காவல்துறை அதிகாரிகள் விமானத்தில் திடீரென்று அவரது ஆடைகளை எங்கு எப்படி கழட்டினார் என்பது குறித்த எந்த விவரமும் தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவத்தால் சக பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டதை அடுத்து விமான நிறுவனம் அதற்காக வருத்தம் தெரிவித்தது.