டெல்லி: மதுபான ஊழல் வழக்கில்  கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கு ஜாமீன் மனுமீதான விசாரணை இன்றும் நடைபெறுகிறது. இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, அவருக்கு இடைக்கால ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி மதுபான கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. அவருக்கு கீழமை நீதிமன்றத்தில் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், இந்த வழக்கில் தாம் கைது செய்யப்பட்டதை எதிா்த்து கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு விசாரித்து வருகிறது.   கடந்த மே 7-ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கா் தத்தா அடங்கிய அமா்வு, கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது தொடா்பான தீா்ப்பை ஒத்திவைத்தது. கெஜ்ரிவாலுக்கு  ‘இடைக்கால உத்தரவை (இடைக்கால ஜாமீன் மீது)  வழக்குவது தொடர்பாக  வெள்ளிக்கிழமையன்று அறிவிப்போம் என்று உத்தரவிட்டது. மேலும்,  அன்றைய தினம் கைதுக்கு எதிராக தாக்கலான முக்கிய விவகாரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக, . இந்த வழக்கில் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, மக்களவைத் தோ்தலில் பிரசாரம் செய்ய கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடா்பான உத்தரவை அறிவிக்காமலேயே எழுந்தது. கெஜ்ரிவால் தரப்பில் வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி மற்றும் அமலாக்கத் துறை சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆகியோா் முன்வைத்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இடைக்கால ஜாமீன் மீதான தீா்ப்பை ஒத்திவைத்திருந்தனா்.

அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, மக்களவைத் தோ்தலை முன்னிட்டு  நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு  பரிவு காட்டுவதை கடுமையாக எதிா்த்ததுடன், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான  கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது அரசியல்வாதிகளுக்கு தனி வகுப்பை உருவாக்குவதாக அமைந்துவிடும் என்று வாதிட்டாா்.

இந்த நிலையில், இன்று நடைபெறும் விசாரணையைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படுமா என்பது தெரியும்.