கேதார்நாத்

ன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்படுகின்றன.

xr:d:DAFZ5i7fRwc:319,j:3216103531,t:23042208

உலகம் புகழ்பெற்ற உத்தரகாண்ட் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள் ‘சார்தாம்’ என்று அழைக்கப்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த கோவில்கள் குளிர்காலம் தொடங்கும் போது மூடப்படு பின்னர் கோடைக் காலம் தொடங்கியதும் மீண்டும் திறக்கப்படும்.

அவ்வகையில் 6 மாதங்களுக்கு பிறகு கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 3 கோவில்கள் இன்று  பக்தர்களுக்காக திறக்கப்படுகின்றன.  இவற்றில் கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில்கள் காலை 7 மணிக்கும், கங்கோத்ரி கோவில் மதியம் 12.20 மணிக்கும் திறக்கப்படும் என கோவில் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இன்றைய.நடை திறப்பையொட்டி கேதார்நாத் கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.கோவில் சுமார் 20 குவிண்டால் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.நாளை மறுநாள் காலை 6 மணிக்கு பத்ரிநாத் கோவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.