பெங்களூரு: ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே  கடந்த இரு நாட்களாக நடைபெற்ற பரபரப்பு வாதங்களைத் தொடர்ந்து இன்று மாலை 3வது நாளாக தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.

கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.  முதல்நாளில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஹிஜாப், காவி துண்டு அணிந்து பள்ளிக்கு வருவதற்கு தடைவிதித்து இடைக்கால தீர்ப்பளித்தது. இதையடுத்து மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாமிய மாணவிகள் நீதிமன்ற உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகாவில் 9 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹிஜாப் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீக்ஷித் ஆகியோர் அடங்கிய ல் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2வது நாள் விசாரணையின்போது,  இஸ்லாமியர்களுக் ஆதரவாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பள்ளிச் சீருடையுடன் பொருந்தக்கூடிய வண்ணங்களில் முஸ்லிம் மாணவர்கள் ஹிஜாப் அணிய அனுமதியளிக்கும் போது, அதையே மாநில கல்வி நிறுவனங்களிலும் பின்பற்றலாமே என கோரிக்கை விடுத்தார். தேசிய அளவில் கூட இதுவே மரபு. தலையில் முக்காடு அணிய அரசாங்கங்கள் அனுமதித்துள்ளன. இது அரசியலமைப்புச் சட்டத்தின் 25வது பிரிவின்படி, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியவும், சீக்கியர்கள் தலையில் டர்பன் அணியவும் அனுமதி உள்ளது” என வாதிட்டார்.

மாநில அரசாங்கத்தின் உத்தரவை விமர்சித்தவர், “சட்டப்பிரிவு 25-ன் கீழ் ஹிஜாப் அணிய அனுமதியில்லை என்ற அரசாங்க உத்தரவு முற்றிலும் தவறானது. இதனை தீர்மானிக்க CDC-க்கு அனுப்புவது முற்றிலும் சட்டவிரோதமானது என்று எதிர்ப்பு தெரிவித்தவர், பொது ஒழுங்கு என்பது மாநில பொறுப்பாகும். ஒரு எம்.எல்.ஏ மற்றும் துணை அதிகாரிகளைக் கொண்ட CDC, இந்த அடிப்படை சுதந்திரத்தை 25வது பிரிவின் கீழ் பயன்படுத்தலாமா இல்லையா என்பதை முடிவு செய்யுமா என்பது கேள்விக்குறி தான். ஒரு கூடுதல் சட்டப்பூர்வ அதிகாரம் நமது அரசியலமைப்புச் சுதந்திரத்தின் பாதுகாவலராக மாற்றப்பட்டுள்ளது. இது முற்றிலும் அனுமதிக்க முடியாதது” என்றார்.

‘இதையடுத்து வழக்கு நேற்று 3வது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது,  மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவ்தத் காமத், விசாரணையின் போது,  ஹிஜாப் அணிவதை  தடை செய்ய கர்நாடக அரசு  பொது ஒழுங்கை காரணமாக குறிப்பிடுகிறது,  ஆனால் ஹிஜாப் அணிவதால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை என தேவ்தத் காமத் வாதிட்டார்.   பொது ஒழுங்கிற்கு  பாதிப்பு ஏற்படாத நிலையில் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் அரசு தலையிட முடியாது என்று குறிப்பிட்ட  அவர், சட்ட விதி 25ன் படி ஒருவர் தங்களின்  மத உரிமைகளை, நம்பிக்கைகளை பின்பற்றுவதை தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

நாம் துருக்கியில் வசிக்கவில்லை என்றும், நமது அரசியல் சாசனம் பல்வேறு நம்பிக்கைகளை அங்கீகரிக்கிறது எனவும் கூறினார். நாம் அனைத்து மதங்களையும் அங்கீகரிக்கிறோம் எனவும் வாதாடினார். அப்போது நமது நீதித்துறையில் கூட பல நீதிபதிகள் ருதராட்சம் அணிந்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,  ஹிஜாப் அணிவதும்  மத நம்பிக்கையின் அடிப்படையில் தான், அதற்கு சட்டம் அனுமதிக்கிறது என்றவர், பல்வேறு வழக்குகளை உதராணமாக சுட்டிக்காட்டியதுடன், மத அடையாளத்தோடு செல்லக்கூடாது என்ற நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நீக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

இதனையடுத்து வழக்கு  புதன்கிழமை (இன்று) பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.  இந்த வழக்கு இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

நீதிமன்ற அறிவுரையை மீறி ஹிஜாப் அணிந்து வந்ததால் கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் பரபரப்பு…