சென்னை

டுத்த 3 மணி நேரத்துக்குச் சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

நாளை மறுநாள் அதாவது 9 மணிக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.  இதனால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை அல்லது அதி கன மழை தொடர்லாம் என வானிலை மையம் கூறி உள்ளது..

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல்  மழை பெய்து வருகிறது.  குறிப்பாக எழும்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், செங்குன்றம், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, கோயம்பேடு, ஆவடி போன்ற பகுதிகளில் தொடர் மழை நீடிக்கிறது.   சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

இந்த மழை சென்னை நகரில் மட்டுமின்றி புறநகர்ப்பகுதிகளிலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளும் பெய்து வருகிறது.    அடுத்த 3 மணி நேரத்துக்குச் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிகக் கன மழை நீடிக்கும் எனவும் திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் பெய்த கனமழையால்  சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.  பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  குறிப்பாக பூந்தமல்லி, போரூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையில் இருபக்கமும் நீர் வெள்ளமாக தேங்கி உள்ளது.

சென்னையில் பல இடங்களில் 10 செமீக்கும் மேல்  மழைப் பதிவாகி உள்ளது.  அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 16 செமீ மற்றும் நுங்கம்பாக்கத்தில் 14 செமீ மழைப் பதிவாகி உள்ளது