சென்னை

ன்று காலை 11 மணிக்குப் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் வெள்ள எசரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.   இதனால் நகரில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் முழுக் கொள்ளளவை எட்டி வருகின்றன.  சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. 

இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு 500 டிஎம்சி உபரி நீர் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படுகிறது.   இதனால் கரையோரப்பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படலாம் என அச்சம் உள்ளதால் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இவ்வாறு சாமியார் மடம், வடகரை, வடபெரும்பாக்கம், மணலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இங்குள்ள கிராம மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைப் போல் இன்று பகல் 1.30 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது