திருவனந்தபுரம்

கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் கேரளாவில் நாளை முதல் மே 16 வரை முழு ஊரடங்கு  அமலாகிறது.

இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மூன்றாம் இடத்தில் உள்ளது.  நேற்று ஒரே நாளில் இங்கு 42,464 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 17,86,397 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு அதில் 3,90,906 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளைக் கேரள அரசு எடுத்துள்ளது.  கேரளாவில் நாளை அதாவது மே 8 முதல் மே 16 வரை முழு ஊரடங்கு அமலாகிறது.  அனைத்து அரசு அலுவலகங்களும் குறைந்த பட்ச ஊழியர்களுடன் இயங்க உள்ளன.   மக்கள் வசதிக்காக ரேஷன் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் மருந்து காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள்,  உணவகங்கள், பால் விநியோகம் மற்றும் இறைச்சிக் கடைகள், தவிர மற்றவை அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும்.   அத்துடன் திருமணங்களில் 20 பேர் வரை மட்டும் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.