மும்பை: பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மும்பையில், பணம் வசூல், கொலை, போதைப்பொருள் கடத்தல், படத்தயாரிப்புக்கு கடன், மிரட்டல்கள் என்று தாவூத்தும், சோட்டா ராஜனும் இணைந்து பல்வேறு வேலைகளைச் செய்தனர். சட்டவிரோதச் செயல்களை உலகம் முழுக்க நெட்வொர்க் ஏற்படுத்திச் செய்ய ஆரம்பித்தார். 1993 மும்பையில் நடந்த மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்புக்கு சோட்டா ராஜன் நண்பர் தாவூத் இப்ராகிமுக்கு முக்கியப் பங்கு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும்  பிரிந்துசென்று தனித்தனியா கதங்களது நிழல்உலக சாம்ராஜ்யத்தை கவனித்து வந்தனர்.

சோட்டா ராஜன்மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. பல வழக்குகளிலும் சிறைதண்டனை பெற்றுள்ளார். இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது. இதனால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.