காந்திநகர்: இந்து முறைப்படி திருமணம் செய்ய வெளிநாட்டில் இருந்து காதல்ஜோடி இந்தியாவுக்கு பறந்து வந்து, குஜராத் மாநிலத்தில், இந்திய கலாச்சார முறைகளின்படி இனிதே திருமணம் செய்து கொண்டது. இந்த வெளிநாட்டு காதல்  திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்தியாவையும், இந்து கலாச்சாரத்தையும், இந்தியாவில் வசிக்கும் ஒரு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், இந்தியா கலாச்சாரத்தை வெளிநாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கானோர் ரசித்து, அதன்படி வாழ விரும்புகின்றனர். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

இந்த நிலையில்தான், வெளிநாடுகளான ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த காதலனை விரும்பி வந்த ரஷ்ய இளம்பெண், இந்திய கலாச்சாரத்தை விரும்பு, இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பு இந்தியா பறந்து வந்து, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ஜூலியா உக்வெஸ்கினா. இவர் வியட்நாமில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அதுபோல, ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ் முல்லர் இவர் பன்னாட்டு நிறுவனத்தில் செயல் அதிகாரியாக செயல்பட்டுவருகிறார். இவர் பணி நிமித்தமாக வியட்நாம் சென்றபோது, ஜூலியா உக்வெஸ்கினாவை சந்தித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் இனைந்து பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த நாடுகளின் கலாச்சாரங்கள் குறித்து அறிந்ததுடன்,  தங்களது காதல் வாழ்க்கையை  தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த காதலர்கள் இந்தியாவுக்கு பல முறை வந்ததாக கூறப்படுகிறது. இந்தியா மீதும், இந்து கலாச்சாரங்களையும் அதிகம் விரும்பி   ஜூலியா உக்வெஸ்கினா 8 முறை சுற்றுலா பயணியாக இந்தியா வந்து,பல்வேறு இந்து கோவில்களுக்கும், இந்து நிகழ்ச்சிகளையும் பார்த்து சென்றுள்ளார்.

இந்த நிலையில்,  காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன்படி,  இந்து முறைப்படி திருமணத்தை நடத்த வேண்டும் என விரும்பிய ஜூலியாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இருவரும் இந்தியா வந்து திருமணம் செய்துகொள்ளும் வகையில் இந்தியா வருகை தந்தனர்.

இந்தியாவில் அவர்களது நண்பர்களை தொடர்புகொண்டு, தங்களது ஆசையை தெரிவித்ததைத் அடுத்து,  அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அதையடுத்து, கடந்த வியாழக்கிழமை குஜராத்தின் சபர்காத் மாவட்டம் ஹிமத்நகர் கிராமத்தில் இந்து மத முறைப்படி ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ் முல்லர் தனது காதலியான ரஷியாவை சேர்ந்த ஜூலியா உக்வெஸ்கினாவை  இந்து மத முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை அந்த கிராமத்தினரே ஒன்று சேர்ந்து தடபுடலாக நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த வெளிநாட்டு காதல் பறவைகளின் த திருமண புகைப்படங்கள்  சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.