டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய தலவரும் (பிசிசிஐ) அணியின்  முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நாடு முழுவதும கொரோனா தொற்று பரவல் ஒருபுறம் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், புதியதாக வந்துள்ள ஒமிக்ரான் தொற்று மற்றொருபுறம் பரவி வருகிறது. இந்த தொற்றானது தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களையும் தாக்கி வருவதால், இதனால் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு போடப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதையடுத்து தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருவதுடன், 12 வயது முதல் 18வயது வரை உடைய சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.

இந்த நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான செளரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கங்குலி ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் எடுதுதுக்கொண்ட நிலையிலும், அவர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு எடுக்கப்பட்ட  ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் சவுரவ் கங்குலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நார்மலாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதை பிசிசிஐ தரப்பும் உறுதி செய்துள்ளது.