சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நாளை மறுதினம் (ஜூலை 6- புதன்கிழமை) விசாரணை செய்யும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஒற்றை தலைமை பிரச்சினை அதிமுகவில், எடப்பாடி, ஓபிஎஸ் இடையே விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த மோதல் ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எதிரொலித்தது. முன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில்ல், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக 2 நாள் நடைபெற வேண்டிய பொதுக்குழு 2மணி நேரத்தில் முடிவடைந்தது. இந்த பொதுக்குழுவில் அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த பொதுக்குழு தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, அதிமுக பொதுகுழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பழனிச்சாமி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு   ஜூலை 6-ல் விசாரணை செய்யும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, தலைமை நீதிபதி அனுமதி பெற்று நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் இந்திரா பானர்ஜி அமர்வு அறிவித்துள்ளது.