சென்னை

மலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரை 13 மணி நேர விசாரணைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். பொன்முடியை அவரது காரிலேயே அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்குத் தனி அறையில் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

அமைச்சரது வீட்டில் இருந்து ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு கார் ஆகியவற்றையும் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அமைச்சரிடம் இரவு 8 மணி முதல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்த விசாரணை இன்று நள்ளிரவு 3 மணியளவில் நிறைவடைந்தது.

நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனையும் 19 மணி நேரத்திற்குப் பிறகு நிறைவடைந்தது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்தநிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து தனது வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார்.  அமலாக்கத்துறை துணை இயக்குநர்  கார்த்திக், “அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை” என்று ர் கூறினார்.

அமைச்சரது வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம்

“மீண்டும் அமைச்சர் பொன்முடி இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. உச்சநீதிமன்ற எச்சரிக்கையை மீறி பொன்முடிக்கு மன உளைச்சல் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநரைத் தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதிகாரிகளின் கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பொறுமையாகப் பதிலளித்தார்”

என்று தெரிவித்துள்ளார்.