டலூர்

முதல்வர் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயகுமார் என்பவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார்.  ஜெயகுமார் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐ டி விங்க் தலைவர் பொறுப்பில் உள்ளார்.

இவர் சில தினங்களுக்கு முன்பு முகநூலில் இவர் முதல்வர் மு க ஸ்டாலினின் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரித்துப் பதிவு இட்டிருந்தார்.   இவர் மீது திமுகவினர் திருநெல்வேலி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

திமுகவினர் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கடலூருக்குச் சென்று பாஜக நிர்வாகி ஜெயகுமாரைக் கைது செய்துள்ளனர்.  அவர் விசாரணைக்காகத் திருநெல்வேலிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.