ஞானி  ஶ்ரீ யோகாம்பிகை அன்னை ஜீவபீடம்
வெளி உலகிற்கு அதிகம் தெரியாத சென்னை திருவேற்காடு, பெண் சித்தர் ஶ்ரீ யோகாம்பிகை அன்னையின் ஜீவபீடத்தை தரிசனம் செய்யலாம் வாருங்கள்🙏
தஞ்சை மாவட்டத்தில் பஞ்சநாத அய்யர் — பாகீரதி அம்மாள் தம்பதியருக்கு 5‌வது மகளாக பிறந்தார். இவரது குடும்பத்தில் பல பேர் சித்தர்களாக உருவெடுத்தனர் 🙏 அதில் நங்கநல்லூர் பொங்கி  மடத்தில் ஜீவபீடம் கொண்டுள்ள ஶ்ரீ சாதுராம் சுவாமிகள்,  ஶ்ரீமோனாம்மாள், ஶ்ரீ ஞானம்மாள் நமது சித்தரின் சகோதர சகோதரிகள் ஆவார்கள் மற்றும் காசி ஶ்ரீவிஸ்வேஸ்வரர் சுவாமிகள் எனப் பல சித்தர்கள் இருந்தனர்.🙏
ஒருமுறை திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் உள்ள இடத்தில் தங்கி இருந்த போது ஒரு நல்ல பாம்பு இவரை சுற்றி வந்து தலையில் மீது ஏறி படம் எடுத்து ஆடியது 🙏
தாய் கருமாரியம்மன் அருளால் பல சித்தாடல்கள் புரிந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மைகளை செய்தார்.🙏
1967ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கருமாரியம்மன் திருபாதங்களை சரணடைந்தார். பின்பு திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் எதிரில் ஜீவபீடம் கொண்டு இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மைகளை செய்து வருகிறார் 🙏
அன்னையின் ஜீவபீடத்தில் கருமாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.  ஜீவபீடத்தில் கிருபானந்த வாரியார் சுவாமிகள் சங்கு ஸ்தாபனம் செய்துள்ளார்.  புதுக்கோட்டை சித்தர் சாந்தானந்த சுவாமிகள்‌ மகாமேரு எந்திரத்தை பிரதிஷ்டை செய்தார்.  சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆதிசங்கரர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.  பிரபல வயலின் வித்துவான் குண்ணக்குடி வைத்தியநாதன் இங்கு வந்து அன்னையை வழிபட்டு புகழின் உச்சிக்கு சென்றார்🙏