டில்லி:
செக்ஸ் புகாரில் சிக்கிய டெல்லி மாநில ஆம்ஆத்தி அமைச்சர் சத்தீப்-பை உடனடியாக பதவி நீக்கி  டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
sandeep
டில்லி, ஆம் ஆத்மி கட்சி  அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர்  சந்தீப் குமார்.  இவர்  சுல்தான்பூர்  மாவட்டம் மஜ்ரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் ஒரு  பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு சிடி வெளியாகி ,  டெல்லி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஆம்ஆத்மி கட்சியின் உயர்நிலை குழு கூடி இது பற்றி விசாரணை மேற்கொண்டது. அப்போது, சந்தீப் குமார் பெயரில் வெளியான  சி.டி. குறித்து  முதலமைச்சர் கெஜ்ரிவால் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.
அதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து சந்தீப்குமாரை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக கெஜ்ரிவால், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, சத்திப்குமார் கூறியதாவது: நான் தலித் என்பதால் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு,  அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப்குமார்,  நான் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சியை பார்த்து மிகவும் வேதனையடைந்தேன் என்றும்,
மேலும், ஆம் ஆத்மி கட்சியில் நான் மட்டும் தான் தலித்  சமுதாயத்தை சேர்ந்தவன், எனக்கு  எந்தவித அரசியல் பின்னணியும் இல்லை  அதனால்தான் எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று  ஆம்ஆத்மி மீது குற்றம் சாட்டினார்.
கட்சிக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்பதாலேயே அமைச்சர் பதவியில் இருந்து விலகினேன், ஆனால் கட்சிக்காக உழைப்பதை நிறுத்த மாட்டேன் என்று சந்தீப்குமார் கூறினார்.