பற்றி எரியும் பேட்டரிகள்: கேலக்ஸி நோட் 7-ஐ திரும்பப் பெறுமா சாம்சங்?

Must read

 
1note-7-fire-3
தென்கொரியா நாட்டில் பிரபல சாம்சங் நிறுவன தயாரிப்பான சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடல் போன்களில் பேட்டரி வெடித்து தீப்பற்றி எரிவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 மாடல் போன்களை திரும்பப் பெறும் என்று தென்கொரிய ஊடகமான ‘யான்ஹாப் நியூஸ்’ அறிவித்திருந்தது.
ஆனால் இந்தத் தகவலை சாம்சங் நிறுவனம் இன்னும் உறுதி செய்யாத நிலையில் அது அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவிருந்த மொபைகளை அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளது.
இதுபற்றி சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பில், கேலக்ஸி நோட் 7 மாடல் தயாரிப்பில் பங்கு கொண்ட அத்தனை கிளை நிறுவனங்களுடனும் கலந்து ஆய்வு நடத்தி வருவதாகவும், விரைவில் எங்கு குறைபாடு இருக்கிறது என்பதை கண்டறிந்து களைந்துவிடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் போன்களை திரும்பப் பெறுவது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
நன்றி: http://www.moneycontrol.com/news/technology/samsung-electronics-considering-galaxy-note-7-recall-source_7395541.html

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article