போபால்

பாஜக அமைச்சர் மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.

வரும் 30 ஆம் தேதி அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு மக்களவை மற்றும் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் ராய்கானி தொகுதியில் பாஜக சார்பில் பிரதிமா என்னும் பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார்.   இவருக்கு ஆதரவாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் மற்றும் அமைச்சர் பிரிஜேந்திர சிங்  யாதவ் ஆகியோர் பிரசாரம் செய்துள்ளனர்.

பிரசார மேடையில் முதல்வருக்கும் அமைச்சருக்கும் நடுவில் பிரதிமா அமர்ந்துள்ளார்.  முதல்வருடன் பேசுவது போல் அமைச்சர் பிரதிமாவின் தொடையில் கை வைத்து எட்டி பேசி உள்ளார்.  இதனால் பிரதிமா அதிர்ச்சி அடைந்துள்ளார்.  பிறகு முதல்வர்  பிரதிமாவை ஆதரித்து உரையாற்றிய போது பிரதிமா அருகில் நின்றுக் கொண்டிருந்தார்.  அப்போது அமைச்சர் பிர்ஜேந்திர சிங் அவரது முடியை த்டவி உள்ளார்.

பிரதிமா திரும்பி அவரை முறைத்து பார்த்துள்ளார்.   அதற்கு அமைச்சர் தனது மூக்கு கண்ணாடி அவர் முடியில் மாட்டிக் கொண்டதாகக் கூறி சமாளித்துள்ளார்.  இது வீடியோ பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.   இந்த வீடியோவில் பிரதிமா அமைச்சரின் அநாகரீக நடவடிக்கையால் முகம் சுழித்தபடி இருப்பத் தெளிவாகத் தெரிகிறது.

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டரில் இந்த வீடியோவை வெளியிட்டு, 

வெட்கமில்லாத செயல். பாஜக வேட்பாளரிடம் பாஜக அமைச்சர் அநாகரீகமாக நடந்து கொண்டார்.  வேட்பாளர் சங்கடத்துடன் அமர்ந்து இருப்பது அவரது முகத்திலேயே தெரிகிறது. சிவராஜ் சார், பாஜக தலைவர்களிடமிருந்து தேசத்தின் மகளைக் காப்பாற்றுங்கள்’

என்று பதிந்துள்ளது.

இதற்கு பின்னூட்டமாகப் பல பாஜக தலைவர்கள் இதுபோல் ஏற்கனவே நடந்த செய்திகள் பதிவாகி வருகிறது.