க்ரா

ரே மாதத்தில் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி 2ஆம் முறையாக உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது தெரிந்ததே.  அப்போது வழக்குப் பதிவு செய்யாமலே பல மணி நேரம் அவர் காவலில் வைக்கப்பட்டு பிறகு வழக்குப் பதியப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.   அதன்பிறகு அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சென்று விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

தற்போது ஆக்ராவில் காவல்துறை காவலில் இருந்த ஒரு தூய்மை பணியாளர் உயிர் இழந்துள்ளார்.  இதனால் ஆக்ராவில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   இதையொட்டி அங்கு 144 தடை விதிக்கப்பட்டது.  யாரும் ஆக்ரா நகருக்குள் செல்லக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில் மரணம் அடைந்த தூய்மை பணியாளர் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொல்லக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி அங்கு சென்றுள்ளார்.

அவரையும் அவருடன் சென்ற வாகனங்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பிரியங்கா காந்தியைக் கைது செய்துள்ளனர்.   இது குறித்து காவல்துறை அளித்த விளக்கத்தில்  ஆக்ராவில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் பிரியங்கா அனுமதி பெறாததாலும் அவரை அனுமதிக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அரசியலமைப்பு சட்டத்தின் படி தாம் நாட்டில் எங்கும் செல்லலாம் என பிரியங்கா கூறிய பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே மாதத்துக்குள் பிரியங்கா காந்தியை 2 ஆம் முறையாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.