பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு! குஷ்பு கருத்தா, காங்கிரஸ் கருத்தா? தேசிய லீக் கேள்வி

Must read

 
சென்னை:
பொது சிவில் சட்டத்தை ஆதரித்து குஷ்பு பேசியதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன.
அகில இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் பண்ருட்டி   ஏ.எம்கான், குஷ்வுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“காங்கிரஸ் தேசிய தலைமைக்கும் மாநில தலைமைக்கும் !
புதிய தலைமுறை கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குஷ்பு  அரசியலும் தெரியாமல் அதன் வரலாறு களும் புரியாமல்,  இஸ்லாமியர்களின் குர் ஆனும் தெரியாமல் உளறி தள்ளியதை கவனித்து இருப்பீர்கள்.
அவரின் பேட்டி முழுவதும் வெளிப்பட்ட தகவல், “பொது சிவில் சட்டம் தேவை.  ஆனால் இப்போது தேவையில்லை. தலாக் முறைகள் பெண்னுரிமைக்கு எதிராக உள்ளது பலதாரமணமும் அப்படிதான் உள்ளது” என்பதுதான்.
kushbu
நாங்கள் உங்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால்
1 குஷ்பு மாதிரியான அடிப்படை அறிவில்லாதவரை ஏன் பேட்டி கொடுக்க அனுமதிக்கிறீர்கள்?
2 தொலைக்காட்சியில் அவர் பேசியது நடிகையாகவா? காங்கிரஸ் பிரதிநிதியாகவா?  நடிகையாக என்றால் நாங்கள் பதில் சொல்லி கொள்கிறோம்.
காங்கிரஸ் பிரதிநிதியாக என்றால்,  காங்கிரஸ் கட்சி பொது சிவில் சட்டத்தை
ஏற்று கொள்கிறதா? என்ற விளக்கத்தை தேசிய தலைமையும் மாநில தலைமையும் அறிவிக்க வேண்டும் !
3. பிரபலமாக  இருக்கும் அளவுக்கு குஷ்புக்கு அடிப்படை அறிவில்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இவரை மத ரீதியான விவாதங்களில் பங்கு பெறவைக்காதீர்கள்!
4 பிரபலம் என்பது எல்லா  காலகட்டத்திலும் கை  கொடுக்காது  என்பதை விளங்கி கொள்ளுங்கள் !
5 குஷ்புவை நடிகை என்ற தளத்தில் தவிர முதிர்ச்சியான சிறந்த அரசியல்வாதியாக அறிவாளியாக பார்க்க முடியவில்லை!
பாட்டுக்கு டான்ஸ் ஆடுவார்,  நடிப்பார்
அது அவரின் தொழில் அவ்வளவுதான்!
கோரிக்கை :
உங்கள் கட்சியில் சிறந்த சிந்தனை ஆற்றலும், உலக அரசியல் அறிவும்  கொண்ட சகோதரி ஜோதி மணி போன்றவர்கள் இருக்கிறார்கள்.  அவர்களைப் போன்றோருக்கு வாய்ப்பு கொடுங்கள்.   கட்சி செல்வாக்கு பெறும்.
இல்லையென்றால், தமிழகத்தில் காங்கிரஸ் சைபர்தான்.   இந்த குஷ்பு மாதிரியான நடிகைகளை  வாய் திறக்கவிடாமல் பார்த்துகொள்ளுங்கள் அது மிகவும் சிறந்ததாகும்”
இவ்வாறு கான் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article