சென்னை: வருகிற 12-ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சொந்த மாவட்டமான திருவாரூர் செல்கிறார்.  ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக அவர் திருவாரூர் செல்வது முக்கியத்துவம்  பெற்றுள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா 2வது அலை, தமிழகஅரசு  எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட வருகிறது. இதனால் பொதுமுடக்கத்தில் சில தளர்வுகளும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், முதல்வர் மீண்டும் மாவட்டங்களுங்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி,  வருகிற 12-ந்தேதி திருவாரூர் செல்லும் மு.க.ஸ்டாலின் அங்கு மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன் முறையாக  மு.க.ஸ்டாலின் திருவாரூர் செல்வது அம்மாவட்ட மக்களிடைய பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

திருவாரூர் செல்லும் முதல்வர், திருக்குவளையில் உள்ள தனது தந்தையார் மு.கருணாநிதியின் வீட்டுக்கு சென்று மரியாதை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.