சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏழை மக்களுக்கு வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதியை, மக்களின் வங்கி கணக்கில் செலுத்துங்கள் என மாநில பாஜக தலைவர் எல். முருகன் தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மாநில பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக தரும் பணத்தை, மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நேரடியாக வழங்கப்படுவதால் அங்கே மக்கள் நெருக்கடி ஏற்படுகிறது. இது தொற்று பரவலக்கு காரணமாக அமைந்து விடும். எனவே, இதைத் தவிர்க்க பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகைத் திட்டம் வழங்கப்படுவதுபோல,  மாநில அரசு சார்பில் அளிக்கப்படும் நிவாரண உதவிப் பணத்தை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்திவிட வேண்டும் என்றார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியான,   “ குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும்”  என்று மக்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள் என்று கூறியவர், .

வரும் நவம்பர் மாதம் வரை ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவதாகவும் இதனால் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக மக்கள் சார்பாகவும் பாஜக சார்பாகவும் பிரதமர் மோடிக்கு நன்றி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.