சென்னை: சென்னையில் இன்று முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக,  கடநத் 15 நாட்களாக தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. நேற்று முதல்  தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 14ந்தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டத்தில், பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் 30 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிநபர்கள், சுயதொழில் செய்வோர் பணிக்கு செல்ல இ-பதிவு செய்துவிட்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலைகளில் மீண்டும் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதையடுத்து சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு வாகனங்கள் சென்று வருகிறது. இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னையில் இன்று முதல் அனைத்து சிக்கல்களும் இயங்கத் தொடங்கும் என்றும், போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.