சென்னை: நெல்லையில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  தொடர்ந்து, ஓசூரில் கோ-ஆப்டெக்ஸ் நிலையம் மற்றும் 3 மாவட்டங்களில் சாயச்சாலை கட்டிடங்களை திறந்து வைத்தார். அதுபோல சில மாவட்டங்களில் மருத்துவமனை கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து,  பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பல்வேறு கட்டிங்களையும், திட்டங்களையும் திறந்து வைத்தார்.

நெல்லையில் கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகத்தை காணொளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளதுடன்,  ஒசூரில் கோ- ஆப்டெக்ஸின் விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்தார். திருநெல்வேலி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை கட்டடங்கள் மற்றும் மூன்று சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயச்சாலை கட்டடங்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

தொடர்ந்த  பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து, பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், தேனி மற்றும் திருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள் திறந்து வைத்து, வேலூரில் கட்டப்படவுள்ள உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் சென்னையிலுள்ள தென் கொரியா நாட்டு துணைத் தூதர் திரு. சாங் நியுன் கிம் (Mr. Chang Nyun Kim)  உடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.