சென்னை: அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை வரும் 13ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதேவேளையில் மே 13ந்தேதி முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணாக்கர்கள் மேல்நிலை படிப்பில் சேரும் வகையில், வரும் 13ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானதை தொடர்ந்து பிளஸ்-1, மாணவர் சேர்க்கை 13-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மாணவர் சேர்க்கை  வரும் திங்கட்கிழமை தொடங்குவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவை கொடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றவர்,  அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும்  தெரிவித்தார்.

10வது தேர்ச்சி தொடர்பான தற்காலிக மதிப்பெண் பட்டியலைக்கொண்டு,  மாணவர்களுக்கு தேவையான குரூப்பை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும்,  முதல் குரூப், சயின்ஸ் குரூப், வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல், வரலாறு பாடங்களை கொண்ட 3-வது குரூப்பிற்கு கடுமையான போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின… 91.55% மாணாக்கர்கள் தேர்ச்சி

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மே 13-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: 1364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி- தமிழில் 8 மாணவர்கள் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண்