சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மாணாக்கர்கள் மேல்நிலை கல்வியில் சேரும் வகையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13-ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில்  வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி முடிவடைந்தது. 4107 மையங்களில் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்  இன்று (மே 10 ஆம் தேதி) வெளியானது.   மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களான dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in மூலம்  தெரிந்து கொண்ளடனர். மேலும் தங்களது  மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு இணையதளத்தில் இருந்த பதிவிறக்கம் செய்து கொண்டனர்.  ஏற்கனவே மொபைல் எண் பதிவு செய்தவர்களுக்கு குறுச்செய்தி அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தேர்ச்சி பெறாதவர்கள், துணை தேர்வுகள் எழுத நாளை (மே 11ந்தேதி) முதல்  விண்ணப்பிக்கலாம் என  பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதுபோல மறுகூட்டல் மற்றும் திருத்தங்களுக்கு 15ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து,  10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில்  வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.