சென்னை

மையல் எரிவாயு சிலிண்டர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 10 முதல் 20 நாட்கள் தாமதம் ஆகின்றன.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன. தற்போது சிலிண்டர் தீர்ந்து போனால், ஒருங்கிணைந்த குரல் சேவை பிரிவு மூலம் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம்., பதிவு செய்த ஓரிரு நாட்களுக்குள் புதிய சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்.

கடந்த சில நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சிலிண்டர் விநியோகம் தாமதம் ஆவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.   ஒரு வாடிக்கையாளர், ”முன்பு சிலிண்டர் காலியானால், புதிய சிலிண்டர் பெற, குறைந்தது 20 நாட்கள்முதல் 1 மாதம் வரை காத்திருக்கும் நிலை இருந்தது. பிறகு இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு, முன்பதிவு செய்த ஓரிரு நாளிலேயே சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

பொதுவாக மழைக் காலத்தில் மட்டும் சிலிண்டர் வருவதற்கு சற்று தாமதம் ஆகலாம். ஆனால் மற்ற நாட்களில் எவ்வித பிரச்சினையும் இன்றி சிலிண்டர் விநியோகம் நடந்து வந்தது. தற்போது மீண்டும் சிலிண்டர் விநியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது பதிவு செய்தால், 10 முதல் 20 நாட்கள் கழித்தே சிலிண்டர் வருகிறது.  விநியோக ஏஜென்சிகளும் இதுபற்றி கேட்டால், முறையாகப் பதில் அளிப்பது இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் இது குறித்து‘

”தற்போது பயன்பாட்டில் உள்ள ஆயுட்காலம் முடிந்த மற்றும் துருப்பிடித்த சிலிண்டர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கேற்ப புதிய சிலிண்டர்கள் வரத்துக் குறைவாக உள்ளது. தாமதத்துக்கு இதுவே காரணம். இப்பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும்’’

எனக் கூறி உள்ளார்.