டில்லி

குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் முந்த்ரா துறைமுகம் அமைந்துள்ளது.  இந்த துறைமுகத்தை பாஜக தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு நெருக்கமான அதானியின் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.   இந்த துறைமுகத்தில் 2988 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரம் நாடெங்கும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.   இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல கேள்விகளுக்கு ஆளும் பாஜக அரசு எவ்வித பதிலும் சொல்லாமல் மவுனமாக உள்ளது.  இந்நிலையில் இந்த போதைப் பொருள் பறிமுதல் வழக்கில் தற்போது என் ஐ ஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் 16 பேர் மீது குறம் சாட்டப்பட்டுள்ளது.  இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுதாகர், துர்கா, ராஜ்குமார் பெருமாள் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரதீப் குமார் ஆகிவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.