சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூடு வழக்கில் காவலர் உள்பட 71 போராட்டக்காரர்கள் மீது சிபிஐ குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தின் 100வது நாள் ஊர்வலத்தின்போது  வன்முறையாக வெடித்தது. அப்போது , காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி,  பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், கொடிய ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட 17 பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த சிபிஐ ஏராளமானோரிடம் விசாரணை நடத்தியது. மேலும், காவல்துறையினரிடும் விசாரணை நடத்தியது.

இந்தநிலையில், சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், போராட்டக்காரர்கள் 70 பேர் மீது குற்றம் சாட்டி இருப்பதாகவும், அவர்கள் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவர்கள் என குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கி சூடு நடத்தியது குறித்த விவரங்கள் வெளியாகாத நிலையில்,   காவலர்களை பணி செய்ய விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்தனர் என்றும், ஒரே ஒரு காவலர் மீது மட்டுமே  குற்றம் சுமத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிபிஐ-யின் ஒருதலைப்பட்சமான குற்றப்பத்திரிகை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்! ஸ்டாலின் உறுதி…