Category: தமிழ் நாடு

சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வராது :அமைச்சர் நேரு உறுதி

சென்னை நகருக்கு குடிநீர் வழக்கும் ஏரிகள் நிரம்பி உள்ளதால் சென்னைக்குக் குடிநீர் பஞ்சம் வராது என அமைச்சர் கே என் நேரு கூறி  உள்ளார். கடந்த சில நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதனால் நகருக்குக்…

விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம்!

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் 30 குண்டுகள் முழுங்க காவல்துறை மரியாதையுடன்  பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்தியாவில் பசுமைப் புரட்சி எனப்படும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் முன்னோடியாகச் செயல்பட்டவர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தைச் சேர்ந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்  வயதுமூப்பு காரணமாக…

இனிமேல்  குடிநீர் வரி கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது! சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு…

சென்னை: அக்டோபர் 1ந்தேதி (நாளை)  முதல் குடிநீர் வரி கட்டணங்கள் பொதுமக்களிடம் இருந்து  ரொக்கமாக பெறப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. கட்டணங்களை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில் செலுத்த வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக குடிநீர் வாரியம்…

சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணை: அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார். இதை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு…

விவசாயிகள் பம்பு செட்டுகளை வாங்க ரூ.15 ஆயிரம் மானியம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்…

சென்னை: தமிழக விவசாயிகள் பம்பு செட்டுகளை வாங்க ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ள பாசனத்திற்கான மின்மோட்டார் பம்பு செட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கும் திட்டத்தில்…

சைதாப்பேட்டையில் மேற்கூரை இடிந்து விழுந்த பெட்ரோல் பங்க்கு சீல் – காயமடைந்தவர்களிடம் அமைச்சர் மா.சு. ஆறுதல்…

சென்னை:  கனமழையால்  சைதாப்பேட்டையில் இடிந்து விழுந்தபெட்ரோல் பங்க் மேற்கூரையார் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த பங்குக்கு சீல் வைத்த அதிகாரிகள், இது தொடர்பாக பங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில்…

டெங்கு தீவிர பரவல் எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் தினசரி 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்!

சென்னை:  தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும்தினசரி  1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு…

அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை நானே விசாரிப்பேன் என்று அறிவித்த  நீதிபதி திடீர் மாற்றம்!

சென்னை: திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தானே விசாரிப்பேன் என்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு  இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம்…

புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 48மணி நேரம் காத்திருப்பு…

சென்னை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. இன்று, புரட்டாசி 2வது சனிக்கிழமை என்பதால், கூட்டம் மோதி வருகிறது. இதனால் ஏழுமலை யானை தரிசிக்க 48மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், பிரசாத லட்டு கவுண்டர்களிலும் லட்டு…

நோயாளிகள் அவதி: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது சென்ட்ரல் – ராஜீவ்காந்தி மருத்துவமனை இடையே நவீனப்படுத்தப்பட்டுள்ள சுரங்க பாதை

சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே உள்ள சுரங்கபாதை மெட்ரோ பணிகளால் மூடப்பட்டிருந்ததால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், மருத்துவமனைக்கு செல்லும் சுரங்க பாதை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என…