கோவை: தமிழ்நாட்டை 69 ஆண்டுகள் ஆண்ட  திராவிட கட்சிகள் ‘விஷ கிருமிகள்!’ என திமுக ஆதரவாளரான  நடிகர் சத்யராஜ் முன்னிலையில் நடிகர்  சிவகுமார் கடுமையாக விமர்சனம் செய்தார்.

விஷக்கிருமிகள் என காங்கிரசால் விமர்சிக்கப்பட்ட திராவிட கட்சிகள் தான் தமிழ்நாட்டை 69 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது.  யாரை ஆட்சி செய்ய வைப்பது என்பது மக்களின் முடிவு. மக்கள் தான் நீதிபதிகள் அவர்களது தீர்ப்பை குறை சொல்ல முடியாது, ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என  நடிகர் சிவக்குமார் பேசினார். அவரது பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்கள் சிவக்குமார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அப்போது, கல்வி நிலையங்கள் அருகில் உள்ள மதுபானக்கடைகளை புதிய அரசு மூடியது பற்றிய கேள்விக்கு, அது மிகவும் சந்தோஷமானது என சிவக்குமார் பதிலளித்தார்.

திரைப்படத்துறையில் இருந்து மேலும் ஒருவர் முதலமைச்சரானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “விஜய் வந்ததால் சந்தோஷப்படலாமே. அவர் வித்தியாசமாக எதையாவது செய்வார் என்று தானே மக்கள் ஓட்டுபொட்டுள்ளார்கள். மாற்றம் என்பதை உலகத்தில் தவிர்க்க முடியாது என்றார்.

1954ம் ஆண்டு முதல் 9ஆண்டுகள் காமராஜர் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்தார். 9 வருடங்கள் சிறையில் இருந்தார். 9 ஆண்டுகள் நாட்டை ஆண்டார். அவர் இறக்கும்போது தலைக்கு அருகே 140 ரூபாயும், 4 ஜோடி சட்டையும், 2 ஜோடி காலணிகளும், 5 & 6 புத்தகங்கள் மட்டுமே இருந்தன.

அப்படிப்பட்ட தலைவரை உங்களால் பார்க்க முடியுமா? அப்படிப்பட்ட காமராஜரையே நீங்கள் தோற்கடித்தீர்கள் தானே.  ஏனென்றால் காமராஜரே உங்களுக்கு தேவையில்லை என அப்போது  மாற்றம் தேவைப்பட்டது.

அதன்பிறகு,  திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவிட்டதாக பக்தவச்சலம் கூறினார்.

திமுகவை  விஷக்கிருமிகள் என எப்படி நீங்கள் சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு,   69 வருடங்கள் அவர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்களே? திமுக, அதிமுக 69 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறார்களே. அவர்களையும் பிடிக்காமல் தானே இன்று மக்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளனர். எனவே இதை மக்கள் தான் முடிவு செய்கிறார்கள். மக்கள் தான் நீதிபதிகள் அவர்களது முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த தேர்தலில்.  முதல்முறையாக வாக்களித்த சுமார் 90 சதவிகித இளம் தலைமுறையினர் காசு வாங்காமல் ஓட்டு போட்டுள்ளனர். பெண்கள் நிறைய ஓட்டுபோட்டுள்ளனர். எனது பேரன் போன்ற அடுத்த தலைமுறையினர் வாக்களித்துள்ளனர். அவர்களது முடிவை தவறு என சொல்ல நாம் யார்?

இதுபோக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் விஜய் ஆட்சியை பிடித்துவிட்டார் என்றும், பெரும்பான்மை இல்லாத அரசு விரைவில் கவிழ்ந்துவிடும் என்றும், மக்களை ஏமாற்றி தவெக ஆட்சி அமைத்துவிட்டதகாவும் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க வேண்டும் எனவும் சிவக்குமார் வலியுறுத்தியதுடன்,  விஜய் நல்லது செய்வார் என நம்புவோம்” என்றார்

முன்னதாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி சென்னையில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், “”தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நான் முன்வைப்பது ஒரே கோரிக்கைதான். மாநிலத்தில் மதுக்கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். குடி மக்களை குடிகார மக்களாக ஆக்கியுள்ளது டாஸ்மாக். மதுபானத்தால் தமிழ்நாட்டில் பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 சதவிகிதத்திற்கும் மேலான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன” என கோரிக்கை வைத்தார். இது திராவிட கட்சிகளின் மீதான அவரது அதிருப்தியாகவே கருதப்பட்டது.

[youtube-feed feed=1]