சென்னை: பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்பது குறித்து அதிகாரிகள் மகிழ்ச்சி தகவல்களை தெரிவித்துளளனர்.

பூந்தமல்லி – வடபழனி வழித்தடம் கடந்த ஆண்டு (2025)  திறப்பு விழாவுக்குத் தயாராக இருப்பதாக கூறி வந்த நிலையில், இதுவரை அந்தவழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கப்படாதது சென்னை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், விரைவில் சேவை தொடங்கும் என சென்னை மெட்ரோஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மெட்ரோ ரயிலின் 2வது கட்டத்தின் ஒரு பகுதியான நடைபெற்று வரும்,  பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் இந்த மாதம் இறுதியில் நடத்தப்பட்டு, திமுக ஆட்சி காலத்திலேயே சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சோதனை ஒட்டத்தில் திருப்தி ஏற்படாததாலும், போரூர் மற்றும் பூந்தமல்லியில் ரயில்வே ஸ்டேஷன் பணிகள் முழுமையான  முடிவடையாததாலும், சேவை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில்,  பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் அனைத்துக் குறைபாடுகளையும் சரிசெய்த பிறகு, ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையரின் தலைமையில்இறுதிப் பாதுகாப்பு ஆய்வு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மெட்ரோவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான வழித்தடம் விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி-வடபழனி வழித்தடப் பணிகள் நிறைவடைந்து, திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழித்தடத்தில் மே 26ந்தேதி அன்று ஆய்வு செய்யப்பட்டு,  14.6 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கவும் வேகத்தை அதிகரிக்கவும் இறுதிப் பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டது.

முன்னதாக பிப்ரவரியில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சில நிபந்தனைகளுடன் இந்த வழித்தடத்திற்கு தற்காலிக அனுமதி அளித்திருந்தார். அதில் வடபழனி நிலையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமானால், பூந்தமல்லியில் இருந்து போரூர் செல்லும் ரயில்களுக்கு இடையிலான இடைவெளி பதினைந்து நிமிடங்களாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும், இரட்டை அடுக்கு வழித்தடத்தில் 26 அடுக்குத் தளங்களின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது அனைத்துக் குறைபாடுகளையும் சரிசெய்த பிறகு, ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையரின் தலைமையில் ஐந்தாவது மற்றும் இறுதிப் பாதுகாப்பு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, இறுதி ஒப்புதல் கடிதம் மெட்ரோவிடம் ஒப்படைக்கப் பட்டது.பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் பத்து நிமிட இடைவெளியில் ரயில் சேவைகளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், போரூரிலிருந்து வடபழனி செல்லும் ரயில்களின் வேகத்தை மணிக்கு 25 கி.மீ. என்பதிலிருந்து 40 கி.மீ. ஆக அதிகரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பூனமல்லி – போரூர் வழித்தடத்தில் ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 32 கி.மீ. ஆக இருக்கும். இதற்கிடையில், ஆரம்பத்தில் ரயில்கள் அனைத்து நிலையங்களிலும் நிற்காது. இந்த வழித்தடத்தில் நிலையங்கள் கட்டுவதில் ஏற்பட்ட சில தாமதங்கள் காரணமாக, ஆரம்பத்தில் ரயில்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த வழித்தடத்தில்,  பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையாஞ்சாவடி, குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியரகரம், போரூர் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து நிலையங்களிலும் ரயில்கள் நின்று செல்லும்.

ஆனால்  ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் கிடங்கு, சாலிகிராமம் ஆகிய ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடையாததால், அங்கு ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, போரூர்  அடுத்து  வடபழனியில் ரயில்கள் நேரடியாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ திறப்பு தேதி குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து விட்டு  இன்னும் ஒரு சில நாளில்  சேவை தொடங்கும் நாள தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]