நாகை:

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக 23 டால்பின்கள் இறந்த நிலையில கரை ஒதுங்கியுள்ளது. இவை அனைத்து பல விதமான அளவு, எடைகள் கொண்டதாக உள்ளது. அனைத்து டால்பின் உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் கூறுகையில், ‘‘டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கிய தகவல் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குட்டையை குழப்பி மீன் பிடித்தல், பை போன்ற வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தல் போன்றவற்றால் டால்பின்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இது போன்ற நடைமுறைக்கு அரசு தடை விதித்துள்ளது. இது போன்ற நிகழ்வுகளை தடுப்பது குறித்து வனத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது’’ என்றார். இதோடு சேர்த்து நாகை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 40 டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது.