சென்னை: கிண்டி அருகே நந்தம்பாக்கம் பகுதியில், வாகன சோதனையின்போது காவல் உதவி ஆய்வாளரை இடித்துதள்ளிவிட்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்டி போரூர் இடையே உள்ள நந்தம்பாக்கத்தில் வாகனை சோதனை நடத்திக்கொண்டிருந்த காவல்துறையினர்மீது வேகமாக வந்த ஆட்டோ, அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜை இடித்து தள்ளிவிட்டு சென்றது. இதனால்  சப்இன்ஸ்பெக்டர் பொன்ராஜுக்கு உடல் தலை என பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடடினயாக அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று சக காவலர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர், அவர்  வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு நேரில் சென்று டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆறுதல் கூறினார்.

இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டரை இடித்து தள்ளிவிட்டு சிட்டாக பறந்த ஆட்டோவை பிடிக்க காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு அவரை தேடி வந்த நிலையில், பொன்ராஜை இடித்து விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர்  சுதர்சனம் (வயது 65) என்பவரை பரங்கி மலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

வாகன சோதனையின்போது ஆட்டோ மோதி காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டிஜிபி…