சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வசிக்கும் மக்களில்  81 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி சத்து குறைபாடு உள்ளது என்பது ஆய்வில்  தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதும் 76 சதவிகிதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வைட்டமின் டி பெற சூரிய ஒளி முக்கியம். ஆனால், நகர வாழ்க்கையில் பெரும்பாலோர் சூரியனை காண்பதே அரிதாக உள்ளது. இதனால், வைட்டமின் டி குறைவு காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வைட்டமின்-டி பல வழிகளில் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.  வைட்டமின் டி குறைபாடு நம் எலும்புகளை பலவீனமாக்கி, எலும்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகளில், இந்த குறைபாடு ரிக்கெட்ஸ் நோய்க்கு வழிவகுக்கும், இது உங்கள் உடலின் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. எலும்பு வலி மற்றும் கீழ் முதுகு வலி ஆகியவை இரத்தத்தில் வைட்டமின் டி போதுமான அளவு இல்லாததற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இது எலும்பு வலி மற்றும் இளக்கத்தை ஏற்படுத்தும் எலும்பு நோய்க்கு வழிவகுக்கும். வைட்டமின்  குறைபாடு புரோஸ்டேட் புற்றுநோய், மனச்சோர்வு, நீரிழிவு நோய், முடக்கு வாதம் மற்றும் ரிக்கெட்ஸ் போன்ற உடல்நலக் கோளாறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருந்தால், கோவிட்-19 இலிருந்து தீவிரமாக நோய்வாய்ப்படும் வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கலாம் என்று இஸ்ரேலின் ஆய்வு முடிவுகள் தெரிவித்திருந்தன. நமது உடலில் வைட்டமின் டி சத்து மிகவும் முக்கியம. வைட்டமின் டி குறைவை தடுக்க,  முட்டையின் மஞ்சள் கரு, மீன், இறைச்சி மற்றும் சத்தான உணவுகள் சாப்பிடுவது நல்லது. இதுபோன்ற சத்தான உணவுகள் வைட்டமின் டி பற்றாக்குறையைத் தடுக்க உதவும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், நாடு முழுவதும் 76 சதவிகிதம் பேரும் சென்னையில் 81 சதவிகித மக்களும் வைட்டமின் டி குறைபாடால் பாதிக்கப்பட்டு உள்ளர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

தனியார் நோயறிதல் ஆய்வகத்தால் (Tata 1 mg)  இந்தியாவில்  சென்னை உள்பட  27 நகரங்களில் நடத்தப்பட்ட 2.2 லட்சத்திற்கும் அதிகமானோரின் சோதனைகளை செய்ததில், அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதன்படி,   சென்னையில் கிட்டத்தட்ட 81 சதவீத மக்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில், இந்திய மக்கள்தொகையில் சுமார் 76 சதவீதம் பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்,

ஒட்டுமொத்தமாக 79 சதவீத ஆண்கள் தங்கள் உடலில் வைட்டமின் D இன் விரும்பத்தக்க அளவை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது, பெண்களுக்கு இந்த எண்ணிக்கை 75 சதவீதமாக உள்ளது.

 தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது, இளையவர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது, Tata 1mg தரவுகளின் பகுப்பாய்வு கண்டறியப்பட்டது.

25 வயதிற்குட்பட்டவர்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது, இது சுமார் 84 சதவீதமாகவும், 25-40 வயதிற்குட்பட்டவர்களில் 81 சதவீதமாகவும் இருந்தது.

36 நகரங்களில் சென்னை 10வது இடத்திலும் (81 சதவீதம்) , ஜெய்ப்பூர் 81 சதவீத இடத்திலும் உள்ளது.  வதோரா (89 சதவீதம்), சூரத் (88 சதவீதம்)  டெல்லியில் வைட்டமின் டி குறைபாடு சதவீதம் 72 ஆக இருக்கிறது.

மாறி வரும் உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை முட்டை, மீன் உள்ளிட்டவை உணவில் அதிகம் சேர்க்காததால் இந்த ‘வைட்டமின் டி’ குறைபாடு ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மேலும், “சூரியனில் இருந்து வரும் யு.வி.-பி கதிர்வீச்சு வெளிப்படும் போது, அது வைட்டமின் டி ஆக மாறுகிறது. மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களும், சூரிய ஒளியை போதுமான அளவு உடலில்படும் அளவுக்கு இல்லாத வாழ்க்கை முறையும் வைட்டமின் டி குறைபாடுக்கு காரணம் ஆகும். இதில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.‘ மேலும்,  சூரிய ஒளியில் பருவகால மாறுபாடுகளும் காரணம் ஆகும்.

வைட்டமின் டி குறைபாடு பெண்களின் கர்ப்பம், தாய் மற்றும் குழந்தைக்கு உடல் நிலையை மோசமாக்க வழிவகுக்கும். 6 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது வைட்டமின் டி அளவை வழக்கமான முழு உடல் பரிசோதனைகளுடன் சேர்த்து பரிசோதிக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குறைந்த சூரிய ஒளியில் இருப்பவர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். முட்டையின் மஞ்சள் கரு, மீன், இறைச்சி மற்றும் சத்தான உணவுகள் போன்றவை வைட்டமின் டி பற்றாக்குறையைத் தடுக்க உதவும்” என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.