ஆடத்தெரியாத ஐஸ்வர்யாவுக்கு ஐநா வாய்ப்பா?: குமுறும் பரதக் கலைர் அனிதா ரத்னம்

Must read

டிகர் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா.  சபையில் நடந்த நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடினார்.

இந்தியாவில் இருந்து ஒருவர் சென்று நடனம் ஆடுவது மிகப்பெரிய வாய்ப்பு என்று அவரை பலரும் புகழ்ந்தார்கள். ஆனால் அவரது நடனத்தைப் பார்த்துவிட்டு தற்போது பலரும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

“ஐஸ்வர்யாவுக்கு நடனக்கலையே தெரியவில்லை. ஒரு நடனக்கலைஞர் எப்படி மேடையில் நிற்க வேண்டும் என்பதற்கு கூட பரதநாட்டியத்தில் விதிகள் உண்டு. அதுவே அவருக்குத் தெரியவில்லை. அவரது நடனம், நடனமாகவே இல்லை” என்று பலரும் ஐஸ்வர்யாவை விமர்சித்திருக்கிறார்கள்.

“ஐஸ்வர்யா தனது செல்வாக்கால், ஐ.நா. சபையில் நடனமாடும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார். திறமையால் அல்ல” என்றும் பலர்  சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இவர்களில் பலர் பரதம் அறிந்தவர்கள் ஆவர். சில பரதக்கலைஞர்களும் ஐஸ்வர்யாவை விமர்சித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் பிரபல நடனக்கலைஞரான அனிதாரத்தினம். அவர், அரசியல் அல்லது நட்சத்திர செல்வாக்கு இல்லாமல் பல நல்ல கலைஞர்கள் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறார்கள்” என்று ட்விட்டியிருக்கிறார்.

மேலும் பலர், , “தகுதியே இல்லாமல் ஐ.நா. மேடையேறி நடனமாடிவிட்டார் ஐஸ்வர்யா. தனக்குத் தெரியாத பரதக்கலையில் இருந்து இவர் ஒதுங்கியிருந்தால், தகுதி உள்ள ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். நம் நாட்டிற்கும் பெருமை கிடைத்திருக்கும்” என்றும்,  “ஐஸ்வர்யா நடனத்தைப் பார்ப்பவர்களுக்கு பரதக்கலை மீது இருக்கும் ஈர்ப்பே போய்விடும்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

சரி.. ஐஸ்வர்யா ரஜினயின் நடனம் எப்படி இருக்கிறது.. பார்த்துவிட்டுச் சொல்லுங்களேன்..

More articles

Latest article