டில்லி,

திமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தார். அதற்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

சசிகலா நியமனம் தொடர்பாக டி.டி.வி.தினகரன் அளித்திருந்த பதில் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்று கொள்ளவில்லை. தங்களிடம் அளிக்கப்பட்டுள்ள கட்சியின் நிர்வாகி பட்டியலில் தினகரனின் பெயரே இல்லை என கூறி அந்த பதிலை தேர்தல் ஆணையம் அதிரடியாக நிராகரித்தது.

மீண்டும் மார்ச் 10 (இன்று) வரை  அவகாசம் அளித்த தேர்தல் ஆணையம், சசிகலாவோ அல்லது அவரால் அங்கீகரிப்பட்ட நபரோ பதில் அளிக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து சசிகலா தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸிற்கு மண்டும் பதில் அளித்துள்ளார்.

அவரது  பதில் மனுவை சசியின் வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளனர்.

70 பக்கங்கள் கொண்ட அந்த பதில் கடிதத்தில்,  தன் மீது புகார் தெரிவித்திருப்பவர்கள்தான் தன்னை பொதுச்செயலாளராக முன்மொழிந்ததாக சசிகலா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் விதிமுறைகளுக்குட்பட்டே பொதுச்செயலாளராக தம்மை நியமனம் செய்துள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.