கொள்ளையில் ஈடுபட்டதாக 2 டிவி நடிகைகள் கைது….!

Must read

கோவிட் 19 தொற்றுநோயின் விளைவாக நடிகைகள் பண பிரச்னைகளை எதிர்கொள்ளத் முடியாமல் தவிக்கின்றனர் .

ஆரே காலனியில் உள்ள கோரேகானில் பேயிங் கெஸ்ட் விடுதியில் டிவி நடிகைகள் சிலர் வேறு சிலருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கிட்டத்தட்ட ரூ 3.28 லட்சம் திருடப்பட்டதாக, ஆரே காவல் நிலையத்தில் விருந்தினர் ஒருவர் புகார் அளித்துள்ளார்,

சுரபி சுரேந்திர லால் ஸ்ரீவஸ்தவா (25), மொசினா முக்தர் ஷேக் (19) ஆகிய நடிகைகள் கொள்ளையில் ஈடுபட்டதாக விசாரணையின் போது தெரியவந்தது. இரு நடிகைகளும் பணத்துடன் தப்பி ஓடியதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர் .

சவ்தான் இந்தியா மற்றும் க்ரைம் ரோந்து போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய நடிகைகள் தான் அவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

திருடப்பட்ட பணத்தில் இருந்து ரூ 50 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். இதையடுத்து சுரபி மற்றும் மொசினா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 23 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

 

More articles

Latest article