கோமாலி உள்ளிட்ட சில தமிழ் படங் களில் நடித்த சம்யுக்தா ஹெக்டே இரண்டு தினங்களுக்கு முன் பெங்களூர் பார்க்கில் அரை குறை ஆடையுடன் ரிங் ரோப் இடுப்பில் வைத்து ஒர்க் அவுட் பயிற்சி யில் ஈடுபட்டார். அதை கண்டு பொது மக்கள் ஆத்திரம் அடைந்து. ’இதுபோல் ஆபாசமாக ஆடை இல்லாமல் பொது இடத்தில் நடனம் ஆடக்கூடாது’ என்று விரட்டினர். அவர்களுடன் வாக்கு வாதம் செய்த நடிகை சம்யுக்தா தான் உள்ளாடை அணிந்திருப்பதாக டிஷர்ட்டை கழற்றி காட்டினார். இதற்கிடையில் கவிதா ரெட்டி என்பவர் சம்யுதாவுடன் வந்த தோழியை தாக்கினார். பின்னர் கூட்டமாக சேர்ந்து சம்யுக்தாவை விரட்டினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ வைரலானது.


சம்யுக்தா ஹெக்டேவுக்கு நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது நடிகை காஜல் அகர்வால் தனது ஆதரவை சம்யுக்தா ஹெக்டேக்கு தெரிவித் திருக்கிறார். அவர் கூறியது:
“ஒ மை காட்! இதை நம்ப முடியவில்லை! கவிதா ரெட்டி உங்கள் கோபப் பிரச்சினை களை நீங்கள் சமாளிக்க வேண்டும். இந்த விரக்தி எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கவும், இளம் பெண்கள் அணிய உடை தேர்ந்தெடுப்பது அவர்கள் சொந்த விஷயம். அதை தவறு என்று எப்படி சொல்லமுடியும் ” என்றார்.


சம்யுக்தாவை அவமானப்படுத்திய கவிதா ரெட்டி, நடிகையிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனாலும் பொது இடத் தில் தன்னை அவமானப்படுத்திய கவிதா ரெட்டியை போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று சம்யுக்தா கூறி உள்ளார்.