மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் இந்திய குடியுரிமை பெற்ற நிலையில், தற்போது தனது குடும்பத்தினர் குறித்து மனத் திறந்து பேசியுள்ளார்.  தனது மகன் ‘ஆரவ்’ குறித்து பேசியவர், னது 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும், அவர் மிகவும் எளிமையானவர், ஆடம்பரத்துக்கு ஆசைபட மாட்டார் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் கிலாடி குமார், நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை அனுபவிக்கும் அக்ஷய் குமார், தனது குழந்தைகளான ஆரவ் மற்றும் நிதாராவைப் பற்றி பொதுவில் பேசுவதில்லை. தற்போது முதன்முறையாக தனது குடும்பத்தினர்குறித்து அவர் பேசியது வைரலாகி உள்ளது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்  இந்திய தேர்தலில் வாக்காளிக்காமல் இருந்து வந்தார். இதுதொடர்பாக கேள்வி எழுந்தபோது, அவர் நீண்ட நாள்களாக கனடா குடியுரிமை வைத்திருந்தது தெரிய வந்தது.. மேலும், அவர்  சம்பாதிக்கும் பணத்தை கனடாவிற்கு அனுப்புவதாக  குற்றச்சாட்டுக்களும்  கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, அவர்  தனது   கனடா குடியுரிமையை திரும்ப கொடுத்துவிட்டு இந்திய குடியுரிமை கேட்டு  விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு கடந்த ஆண்டு (2023)  இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.  அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அக்‌ஷய் குமார் பதிவிட்டு இருந்தார்.

இந்திய குடியுரிமை கிடைத்த பிறகு அக்‌ஷய் குமார் இன்று முதல் முறையாக 18வதுமக்களவைத் தேர்தலில் மும்பையில் வாக்களித்தார்.  வாக்களித்த பிறகு நிருபர்களுக்கு அளிக்த பேட்டியில், “இந்தியா வளர்ச்சியடையவும், வலுவானதாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். எனவே அதனை கவனத்தில் கொண்டு வாக்களித்தேன். மக்கள் தங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அவர்களுக்கு வாக்களிக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்,   பாலிவுட் நடிகை ட்விங்கிள் கண்ணாவை மணந்தார். இருவருக்கும் 2002ல் ஆரவ் பிறந்தார்.  பின்னார் நிதாரா 2012 இல் பிறந்தார். கடந்த மாதம் ஆரவ் 21 வயதை அடைந்தார். அக்ஷய் தனது மகனுக்காக தனது பிறந்தநாளில் ஒரு சூடான குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.  அதில்,  “ஹாய் மேரே ஆங்ரேஸ் புட்டர்… உங்கள் கேக்கில் உள்ள மெழுகுவர்த்திகள் இன்று 21 ஆக எண்ணிக்கொண்டிருக்கிறது, ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் எப்போதும் என் மடியில் குதித்து கடினமான ஒரு நாளை எடுத்துச் செல்ல விரும்புபவராக இருப்பீர்கள். என் மகனே, உன் நாளை என்ஜாய் பண்ணு, நீ ஏற்கனவே செய்துகொண்டிருக்கிறாய் என்று நான் சந்தேகப்படும் அனைத்தையும் இப்போது சட்டப்படி செய்யலாம்;) லவ் யூ, ஆரவ். என்றென்றும் உங்கள் பெருமைக்குரிய அப்பா என தெரிவித்திருந்தார்.

அக்ஷய் குமார் தனது குடும்பத்தினர் குறித்து பொதுவாக நிகழ்ச்சிகளில் பேசுவது இல்லை. அதுவும் தனது குழந்தைகளைப் பற்றி அரிதாகவே பேசுகிறார் – மகன் ஆரவ் மற்றும் மகள் நிதாரா – பொது இடங்களில், அவர்களின் வாழ்க்கையை வெளிச்சத்திலிருந்து விலக்கி வைத்தே வருகிறார்.. இருப்பினும், ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் புத்தம் புதிய டாக் ஷோவான தவான் கரேங்கேயில்  விதிவிலக்காக முதன்முறையாக தனது குடும்பத்தினர் குறித்த நினைவலைகளை பகிர்ந்தார்.

இதுதொடர்பாக உரையாடலின் போது, தனது மகன் மகள் குறித்து பேசிய அக்ஷய்குமார், தனது மகன்  ​​​​ஆரவ் படங்களில் ஒரு பகுதியாக இருக்க விரும்ப வில்லை என்றும் ஃபேஷன் தொழிலைத் தொடர விரும்புகிறார் என்றும் அக்ஷய் தெரிவித்தார்.

இந்த உரையாடலில் தொடர்ந்து பேசியவர், தனது மகன் ஆரவ் 15 வயதில் ஆரவ் வெளிநாட்டில் படிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால், அவர் வெளியேறுவதை நான் விரும்பவில்லை என்பதை பகிர்ந்து கொண்டவர், தற்போது  எனது மகன் ஆரவ் லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.   எப்போதும் படிப்பில் ஆர்வம் கொண்ட அவர் தனியாக இருக்க விரும்பினார். அவர் வீட்டை விட்டு வெளியே செல்வதை நான்  விரும்பவில்லை என்றாலும் நகர்வது அவனது முடிவு.  அதனால், அவன் வீட்டை விட்டு வெளியேறியதால் என்னால் அவரைத் தடுக்க முடியவில்லை என்றவர், தனது மகன் குறித்து மேலும் சிலாகித்து கூறினார்.

தனது மகன்  வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே செய்ததாகவும்,  விலையுயர்ந்த ஆடைகளை அணிவதைத் தவிர்த்ததற்காக கூறியவர்,  அவர் விரயம் செய்வதை விரும்பாதவர், விலையுயர்ந்த ஆடைகளை கூட வாங்க விரும்பவில்லை. உண்மையில்,  துணிகளை வாங்க, சிக்கனமான ஒரு பழைய கடைக்குச் சென்று பழைய ஆடைகளையே வாங்கி  அணிகிறார் என்றார்.   அவரது துணிகளை அவரே  துவைக்கிறார், அவர் ஒரு நல்ல சமையல்காரர், அவர் பாத்திரங்களைச் செய்கிறார் என்றார்.

பொதுவாக பெற்றோர்கள் திரையுலகில் இருக்கும்போது அவர்களது வாரிசுகளும் திரையுலகிற்கு வருவது வாடிக்கையானது என்றாலும்,  ஆரவ் தனது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி இருவரும் திரையுலகில் ஒரு பகுதியாக இருப்பினும்,  தனது மகனுக்கு படங்களில் ஆர்வம் இல்லை  என்று குறிப்பிட்டவர்,  “நாங்கள் அவரை எதையும் செய்யும்படி கட்டாயப்படுத்தவில்லை என்றார்.

மேலும், ஆரவ்  ஃபேஷனில் ஆர்வம் கொண்டவர், சினிமாவில் நடிக்க விரும்பவில்லை. அவர் என்னிடம் வந்து நான் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று கூறினார். இதுதான் உன் வாழ்க்கை, நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய்” என்று சொன்னேன்.

ஆரவ்வை எளிமையான மனிதராக வளர்த்ததற்காக அக்ஷய் தனது மனைவியையும் தன்னையும் பாராட்டினார். அவர் கூறுகையில், “நானும் ட்விங்கிளும் ஆரவ்வை வளர்த்த விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மிகவும் எளிமையான பையன். மறுபுறம், என் மகளுக்கு ஆடைகள் பிடிக்கும் என்றார்.