மும்பை

நேற்று மும்பையில் பல திரை பிரபலங்கள் வாக்களித்துள்ளனர்.

மொத்தம் 543 உறுப்பினர்களை கொண்ட இந்திய நாடாளுமன்றக்குத்துநடந்து வருகிறது. ஏற்க்கனவே இந்த தேர்தலில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.  இதில் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்து உள்ளது. இவற்றில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வான குஜராத்தின் சூரத் தொகுதியும் அடங்கும்.

ஏற்கனவே நடந்த 4 கட்ட தேர்தல்களின் மூலம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து விட்டது. இவற்றில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் இந்திய மாநிலங்கள் முக்கியமானவை ஆகும்.

நேற்று 5 ஆம் கட்டமாக 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்-நடிகைகளும் வாக்களித்துள்ளனர்.

நேற்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை வித்யா பாலன், அனில் கபூர், நடிகர் மனோஜ் பாஜ்பாய் மற்றும் அவரது மனைவி ஷபனா ராசா,நடிகர் அமீர்கான் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கிரண் ராவ், நடிகர் சன்னி தியோல், ரன்வீர் சிங்,ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் மும்பையில் வாக்களித்தனர்.