லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்றுகொண்டிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாக பாங்காக்கில் அவசரமாக தரையிறங்கியது.

211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த போயிங் 777-300ER விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக இந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி உயிரிழந்ததாகவும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.