சென்னை: “மூச்சு விடுவது போல இசை எனக்கு இயற்கையாக வருகிறது”  என ஐஐடி நிகழ்ச்சியில் பேசிய  இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

சென்னை ஐஐடியில்,  இசைஞானி இளையராஜா பெயரில் ஐஐடியில் கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.,’மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’  என பெயரில் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

முன்னதாக,  சென்னை ஐஐடியில், இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த மாநாட்டின் தொடக்க விழாவில், திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் ராஜ்ய சபா எம்.பி.யும், இசையமைப்பாளருமான இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், நாடு முழுவதும் இருந்து 220 கலைஞர்கள் பங்கேற்று சிவ வாத்தியம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய கலைகளில் தங்களது திறமைகளை வெளிக்காட்ட உள்ளனர்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, ஐஐடி வளாகத்தில்,’மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா,  “கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்வதற்காக சிறுவயதில் 400 ரூபாயுடன் வந்தேன். இசை என்றால் என்னவென்று அப்போது எனக்கு தெரியாது”. “இசையை கற்றுக்கொள்வதற்காக வந்த நான்,  இன்றைக்கு மையம் ஒன்றை ஆரம்பித்து  அனைவருக்கும் கற்றுகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.  நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை என்றவர், கிராமத்தில் இருந்து சென்னை  வந்த நாளில் இருந்து இந்நாள் வரை நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை. அனைவரும் நான் சாதித்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை” என்றவர், என்னை யாராவது நன்றாக  இசையமைப்பதாக யாராவது சொன்னால் நன்றாக சுவாசிக்கிறீர்கள் என சொல்வதுபோல் உள்ளது.  “இசையமைப்பது எனக்கு மூச்சு விடுவதைப் போல் இயல்பானது என்று கூறியதுடன், சென்னை ஐஐடியில் இருந்து 200இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை” என்றார்.