சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு இந்தித் திரையுலகில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக வெடித்தது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், தினமும் இது தொடர்பான செய்திகளையே இந்தி ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.

இது தொடர்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில் :-

“மும்பையில் ஒரு மரணம் நிகழ்ந்தது. இரண்டு மாதங்கள் ஊடகங்கள் பித்துப் பிடித்தது போலத் திரிந்தன, பார்வையாளர்களையும் அப்படியே ஆக்கின. ஊடகங்கள் செய்யும் விசாரணை மிக ஆபத்தானது. நாம் அந்த வலையில் சிக்கிவிட்டோம். ஊடகம் செய்யும் விசாரணை பொது மக்களைக் குழப்பும். இந்த தேசம் அழியப்போகிறது. ஜெய்ஹிந்த்.

அரசாங்கம் நடத்திய டிடி இன்றைய ஊடகங்களை விட நன்றாக இருந்தது. அதிக சக்தி இல்லையென்றால் அதிக செல்வாக்கு வரும்போது பொறுப்புகளும் அதிகமாகின்றன. அதிக அதிகாரம் வரும்போது நேர்மையற்ற அணுகுமுறையும் வந்துவிடுகிறது. உண்மையின் தரம் குறைந்துள்ளது. எல்லாம் டிஆர்பிக்காகத்தான். அதிகமான பணம்தான் டிஆர்பியின் மொழியைப் பேசும்” என பதிவிட்டுள்ளார் .