டெல்லி

தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி பிரசாரப்பாடலுக்குத் தடை விதித்ததற்கு அமைச்சர் அதிஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வரும் மே 25 ஆம் தேதி டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரப் பாடலுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

அதிஷி இது குறித்துச் செய்தியாளர்களிடம்,

“இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சியின் பிரசாரப் பாடலுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பது இதுவே முதல் முறை. ஆம் ஆத்மியின் பிரசார பாடல் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை மோசமாகக் காட்டுகிறது எனத் தேர்தல் ஆணையம் கூறிஉள்ளது. 

ஆனால்  பா.ஜ.க. தினந்தோறும் செய்யும் விதிமீறல்களைத் தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை.  பாஜகவில் அரசியல் தலைவர்கள் இணைந்தவுடன் அவர்கள் மீதான வழக்குகள் மூடப்பட்டால் தேர்தல் ஆணையம் ஆட்சேபனை கூறுவதில்லை., பிரசார பாடலில் இதனை குறிப்பிட்டால் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. 

எஎறு கூறியுள்ளார்.