சென்னை கொரோனா தொற்றால் உயிரிழந்த நடிகர் பாண்டு, அதிமுகவின் வெற்றிச்சின்னமான ‘இரட்டை இலை’யை உருவாக்கிய சாதனையாளர் என்பது மட்டுமின்றி,  எம்ஜிஆரின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த பாண்டு, எம்ஜிஆரின் வெற்றிப்படமான உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கா வித்தியானமான முறையில் விளம்பரங்களை வடிவமைத்து, அப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டவர் என்பதும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.

நடிகர் பாண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக  சிகிச்சை பலன்றி இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 74. இவர் ஒரு ஓவியக்கல்லூரி மாணவர். இளம் வயதிலேயே ஏராளமான விளம்பரங்கள் படங்களை வரைந்து அசத்தியதுடன், கடந்த 1975 ஆம் ஆண்டு மாணவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமானார். 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாராட்டு பெற்றவர்,

நவீன காலத்துக்கு தகுந்தவாறு  கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை  நடத்தி வந்த பாண்டு, அழகுற நிறுவனங்களின் பெயர்களை வடிவமைத்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். பல்வேறு தி  நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து கொடுத்து பாராட்டு பெற்றவர்.

இவர்தான்,  திமுகவில் இருந்து பிரிந்து எம்ஜிஆர் அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கியது, அந்த கட்சிக்கு உரிய கொடி  மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர். ஆனால், அதிமுக கொடி வடிவமைத்தது யார் என்பதில் இன்னமும் பஞ்சாயத்து தொடர்கிறத. அனுழலு, அதிமுகவின் வெற்றிச்சின்னமான இரட்டை இலை சின்னத்தையும், கொடியையும்  வடிவமைத்து கொடுத்தது நாதான் என்று பாண்டுதான் உறுதிப்படுத்தினார்.

திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகி அதிமுக கட்சி தொடங்கிய நிலையில், அவர் உலகம் சுற்றும் வாலிபன் என்ற படத்தை தயாரித்தார். அந்த படத்தின் போஸ்டர்கள், பேனர்களை வைக்க முடியாத சூழல் நிலவியது. இதனால்,  புதிய முறையிலான விளம்பர உத்தியை தயாரிக்க பாண்டுவிடம் எம்ஜிஆர், அதற்கான பொறுப்பை ஒப்படைத்தார். அதன்படி வீடுதோறும் சிறிய அளவிலான டோர் ஸ்லிப் எனப்படும் சிறிய வகையிலான போஸ்டரை அவர் உருவாக்கினார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுமு. பாண்டு தயாரித்து கொடுத்த விளம்பரமே, உலகம் சுற்றும் வாலிபன் வெற்றிக்கு வித்திட்டதாக கூறப்படுகிறது. அது பல வகைகளிலும் பிரச்சார உத்தியாக மாறியது. இவ்வளவு பெருமைக்குரியவராக இருந்தாலும் பெரிய அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் திரைப்படங்களில் நடித்து வந்தார் பாண்டு.

கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது நடிகர் பாண்டுவும், தாமே அதிமுகவின் கொடியையும் இரட்டை இலை சின்னத்தையும் உருவாக்கியதாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.   ஓவியக் கல்லூரி மாணவராக இருந்த தம்மை அழைத்து எம்ஜிஆர் அதிமுக கொடியை உருவாக்க சொன்னார்; இதற்காக 5 பவுன் தங்கச் சங்கிலி, ரூ10,000 ரொக்கத்தை எம்ஜிஆர் தந்ததாகவும் நடிகர் பாண்டு அந்த பேட்டியில் கூறியிருந்தார். அந்த பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதுபோல அதிமுக கொடியை உருவாக்கியது அங்கமுத்து என்ற தகவலும் உலா வருகிறது.  திரைப்படத்துறையில் கலை இயக்குனராக  இருந்த அங்கமுத்து. அங்கமுத்துதான், கருப்பு சிவப்பு கொடிகளுக்கு  இடையே  அறிஞர் அண்ணாவின் உருவம் பொறித்த கொடியை உருவாக்கியவர் என்று   பிரபல புகைப்படக் கலைஞராக இருந்த மறைந்த சுபா சுந்தரம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.