மதுரை: அண்ணா போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர், அதிமுக ஆட்சி காரணமாக, பணிக்கு வராமலேயே சம்பளத்தை மட்டும் வாங்கி வந்த நிலையில், தற்போது ஆட்சி மாறியதால்  மீண்டும் பணிக்கு வர தொடங்கி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழகத்தில் 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் உள்ளனர். இந்த சங்கத்தைச்சேர்ந்தவர்களின் கட்சி ஆட்சிக்கு வரும்போது, தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பணி செய்யாமல், கட்டாப்பஞ்சாயத்து செய்து வந்தும், அதிகாரிகளை மிரட்டியும் சொகுசுசாக வாழ்ந்து வருவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இவர்கள் ஓடி என்ற பெயரில், தினசரி பதிவேட்டில் கையெழுத்துக்களை போட்டுவிட்டு, பணிக்கே செல்லாமல் சம்பளம் பெற்றுவந்தனர்.

ஒவ்வொரு மாவட்ட  போக்குவரத்து கழக அலுவலகத்திலும் குறைந்த பட்சம் 5 பேராவது இப்படி வேலை செய்யாமல் ஊதியம் பெற்று வந்ததாகவும், சுமார் 1500 பேர் இவ்வாறு ஓப்பி அடித்துக்கொண்டு, ஜாலியாக சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது,  10ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கு முடிவுகட்டிவிட்டு, திமுக ஆட்சியை கைப்பற்றி உள்ளதால்,  10 ஆண்டுகளாக ‘ஓடி’ என்ற பெயரில் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கி வந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், உலைக்கு ஆப்பு வந்துவிடும் என்ற பயத்தில் மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.