டெல்லி: தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது. மேலும், இதற்காக தேர்தல் அதிகாரிகள் மீது கொலைக்குற்றச்சாட்டுக்கூட பதியலாம் என்றும் தெரிவித்திருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்து நாடு முழுவதும் எதிரொலித்தது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், சென்னை உயர்நீதிமனற் நிதிபதிகளின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடியது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது,  , தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் கூட சுமத்த முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது கடுமையானது, இதுபோன்ற வழக்குகளில் நீதிபதிகள் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், இரண்டு அரசியலமைப்பு அதிகாரிகளின் அதிகாரங்களை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு நுட்பமான கேள்வி எழுந்துள்ளது.  இந்தியாவில் பேச்சு சுதந்திரத்தின் பெரிய பிரச்சினையை எழுப்பியுள்ளது, ‘சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று  தெரிவித்தார்.

மேலும்,  நீதிமன்றம் தொடர்பான விசாரணைகளை,  செய்திகளாக வெளியிடலாம் என்றும் தெரிவித்ததுடன், ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை  நீதிமன்றங்களால் தடுக்க முடியாது என்றும்,  மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை உத்தரவுகளில் தீர்ப்பின் ஒரு பகுதியாக அந்தக் கருத்துக்கள் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியதுடன்,  தேர்தல் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.